Saturday, 16 August 2014

சுதந்திர தின விழா-2014

சுதந்திர தின விழா-2014
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுதந்திர தின விழா, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.கலைநிகழ்ச்சிகளும் சிறப்புடன் நடந்தன.

அதில் எங்கள் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

பாரதிதாசனின்” புதியதோர் உலகம் செய்வோம்”என்ற பாடலுக்கு வெகு சிறப்பாய் ஆடி அனைவரின் மனதைக் கவர்ந்தனர்.கோலாட்டம் ,ஒயிலாட்டம்,வெஸ்டர்ன்,நாட்டுப்புற நடனம்,பரதநாட்டியம்,பொம்மலாட்டம்,சேலைநடனம்,சிலம்பாட்டம் மற்றும் பாரதிதாசன் வேடமிட்டு எட்டுவகைகளில் ஒரே பாடலுக்கு நடனமாடினர்.
காலையில் கிளம்பும் முன்



 ஆயுதப்படை மைதானத்தில்







மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் நடனம் ஆடுகின்றனர்.



அரசுப்பள்ளி மாணவர்கள் எதற்கும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நேற்று நிரூபித்தனர்...

நடனம் ஆட இடமின்றிபள்ளிக்குப் பின்  சிறிது தொலைவில் உள்ள பொட்டலுக்குச் சென்று பயிற்சி கொடுத்தோம்.பொட்டலுக்கு அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் மின் இணைப்பு கொடுத்து நடனமாட உதவினார்கள்.காலையில் பள்ளியிலும்,மாலையில் பொட்டலிலுமாக எங்கள் குழந்தைகள் பயிற்சி எடுத்தனர்.

சிறப்பாக ஆட வேண்டுமே என்ற எங்களின் கவலையில் என்ன சொன்னாலும் பொறுத்துக்கொண்டு மாணவிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்...

சுதந்திர தினத்தன்று காலையில் 6மணிக்கே எங்கள் பள்ளி ஆசிரியர்கள் வந்து மாணவிகளுக்கு ஒப்பனை செய்து மாணவிகளுக்கு உற்சாகமூட்டினர்.ஒரு ஆசிரியர் தனது சொந்த வாகனத்தை இலவசமாகத் தந்து மாணவிகளை விழா நடக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று வர உதவினார்...

பல்வேறு சிரமங்களுக்கிடையில் பெற்றோரும் ஒத்துழைப்பு நல்கினர்.காலையில் கிளம்பும் சமயத்தில் ஒயிலாட்ட மாணவி ஒருத்தி வரவில்லை.முதல்நாள் மாலையே அவளுக்கு போன் செய்த போது சமயபுரம் கோவிலில் இருக்கிறோம் வந்துவிடுவோம் என்று அவளின் அம்மா கூறினார்கள்...காலையில் அவள் வராத நிலையில் திடீரென்று வேறு ஒரு மாணவியை சேர்த்து பயிற்சி அளித்து...ஒருவழியாக ஆயுதப்படை மைதானத்திற்குச் சென்றோம்...

மாணவிகள் கண்களில் சிறப்பாக ஆடவேண்டுமே என்ற ஆர்வமும் கவலையும்...... அரசுப்பள்ளி மாணவிகள் தானே  என யாரும் குறை கூறும் படி எதுவும் நடக்க கூடாதென்ற கவலையில் நாங்கள் ...வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலர்... உடலில் வலு குறைந்தவர்கள்...என்பதால்...பதட்டமாய் இருந்தது....ஆடும் நேரமும் வந்தது....

அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கும் படி மிக மிகச் சிறப்பாய் ஆடி....எங்களின் கவலையை தீர்த்தனர்.....

அரசுப்பள்ளி மாணவிகள் எதற்கும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த எங்களின் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஆர்வமே எங்கள் குழந்தைகளின் திறனை வெளிக்கொணரக் காரணமாயிருந்தது....!

ஆடிய பத்து பள்ளிகளில் நடன இயக்குனரின்றி ஆடியப்பள்ளி எங்கள் பள்ளி மட்டுமே....!இதுவரை இந்த மைதானத்தில் இதுவரை யாருமே செய்யாத புதுமையான கொரியோ கிராபி என நிகழ்ச்சி தொகுப்பாளரால்   வர்ணிக்கப்பட்டது.
ஆறுதல் பரிசும்,சான்றிதழும் அளித்து எங்கள் மாணவிகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஊக்குவித்தார்...!
.ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிதனைச் சமர்ப்பிக்கின்றேன்...நன்றி..


No comments:

Post a Comment